சிவன்மலையில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை

காங்கேயம் அருகே, சிவன்மலையில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-11-01 14:33 GMT

சிவன்மலை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள  சிவன்மலை முருகன் கோவிலில்,  ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா தொற்று பரவல் காரணமாக,  கடந்த 2 ஆண்டுகளாக விழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், நடப்பாண்டும் பக்தர்கள், கட்டளைதாரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து உதவி ஆணையர் முல்லை தெரிவித்துள்ளதாவது: கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நடப்பாண்டு,   சில தளர்வுகளுடான சில கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. நடப்பாண்டு நவ.5 ம் தேதி முதல் 11 ம் தேதி வரை,  கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும், மலைக்கோவில் மீது நடைபெறும். அரசின் வழிக்காட்டுதல்படி, நவ., 4 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை,  பக்தர்கள் மற்றும் கட்டளைதாரர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால், கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான 9 ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம், 10 ம் தேதி நடைபெறும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்றார்.

Tags:    

Similar News