காங்கயம் விற்பனைக்குழுவில் ரூ.1.34 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
காங்கயம் விற்பனைக்குழுவில் ரூ.1.34 லட்சம் தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டது.;
திருப்பூர் விற்பனைக்குழு, காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் இன்று நடந்தது. ஏலத்திற்கு 8 லாட் அளவில் 27 மூட்டைகள் கொண்டு வரப்பட்டது. அதிகபட்சமாக ஒரு கிலோ 103 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80 க்கும், சராசரியாக 102 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மொத்தம் ஆயிரத்து 351 கிலோ தேங்காய் பருப்பு, ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 181 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக விற்பனைக்குழுவினர் தெரிவித்தனர்.