காங்கயம் ஒழுங்கு முறை கூடத்தில் ரூ.4.23 லட்சத்துக்கு ஏலம்
காங்கயம் ஒழுங்கு முறை கூடத்தில் 89 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.4.23 லட்சத்துக்கு ஏலம் சென்றது.;
காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ஏலத்திற்கு 89 மூட்டை தேங்காய் பருப்பு வந்தது. அதிகபட்சமாக ரூ.104க்கும், குறைந்தபட்சமாக ரூ.85.10 க்கும், சராசரியாக ரூ.103.70 க்கும் என மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 644 க்கு விற்பனை ஆனது.