மக்களை தேடி மருத்துவம்:அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைப்பு

தெக்கலூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.;

Update: 2021-08-05 14:13 GMT

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவில் மக்களை தேடி மருத்துவம் வாகனத்தை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டடுள்ளது. கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம், தெக்கலூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். மேலும், மக்களை தேடி மருத்துவத் திட்டத்திற்கான மருத்துவ வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினீத், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் ஜெகதீஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.


Tags:    

Similar News