அவிநாசி அருகே செல்போன் திருடிய நபர் கைது
அவிநாசி அருகே முகவரி கேட்பது போல் செல்போனை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.;
அவிநாசி, பெரியகாரணம்பாளையத்தை சேர்ந்தவர் மணி. இவர் நேற்று மங்கலம் மேம்பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது ஸ்கூட்டரில் வந்த ஒரு நபர், முகவரி கேட்பது போல் நடித்து மணி வைத்து இருந்த18 ஆயிரம் மதிப்பிலான செல்போன் பறித்து சென்று விட்டார். இதுகுறித்து அவிநாசி போலீசில் மணி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் தெக்கலூர் பகுதியில் சந்தேகத்தின்படி வந்தவரை பிடித்த விசாரித்தபோது, அவர் மணியூர் பகுதியை சேர்ந்த லோகேஷ்குமார் 32 என்பதும், மணியிடம் செல்போன் பறித்தவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து லோகேஷ்குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.