வாணியம்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

வாணியம்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை இளைஞர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்

Update: 2021-08-14 05:10 GMT

வாணியம்பாடியில், குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் திடீரென 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று குடியிருப்புக்குள் புகுந்தது.  இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வாணியம்பாடி தீயணைப்புத்துறையினருக்கும், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் இளைஞர் பிடித்து வைத்திருந்த பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்தனர் அதன்பின் வனத்துறையினர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்று பாம்பை விட்டனர்.

Tags:    

Similar News