வாணியம்பாடியில் நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே பாலாற்றின் கிளை ஆற்றில் நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு. போலீசார் விசாரணை;

Update: 2021-12-10 16:37 GMT

பாலாற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் தினேஷ்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த கார்பென்டர் கூலி தொழிலாளியான சிவராஜ் இவரது மனைவி சரசு கடந்த ஆண்டு புதுச்சேரியில் கொரோனா நோய் தோற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு 3 பிள்ளைகள். இரண்டாவது மகனான தினேஷ் (வயது 18) இவர் தேங்காய் மண்டியில் கூலி வேலை செய்து வருகிறார்.

தினேஷ் அவரது பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது,  வாணியம்பாடி அடுத்த ராமாயணதோப்பு பாலாற்றின் கிளை ஆற்றில் நடந்து சென்றபோது தண்ணீரில் மூழ்கியுள்ளார்.  அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சித்துள்ளனர்.  இருப்பினும் ஆழமான பகுதி சென்றதால் மீட்க முடியவில்லை இருப்பினும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி அங்கிருந்தவர்கள் சடலமாக மீட்டனர்

இச்சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி நகர போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags:    

Similar News