வாணியம்பாடி அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் கைது.

வாணியம்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது;

Update: 2021-06-08 15:15 GMT

வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் விஜய் ( வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த (11 வயது) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமி தனது தாயிடம் சென்று சம்பவத்தை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் தாய் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அப்புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சிறுமியிடம் விஜய் தவறாக நடந்தது விசாரணையில் தெரியவந்தது. 

இதனையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் விஜயை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News