தன்னை கன்னத்தில் அறைந்த சிறப்பு உதவி ஆய்வாளரை திருப்பி அடித்த இளைஞர்
வாணியம்பாடி அருகே தன்னை கன்னத்தில் அறைந்த சிறப்பு உதவி ஆய்வாளரை திருப்பி அடித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது;
இளைஞரை தாக்கும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம் அருகே நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்( வயது30). இவர் இருசக்கர வாகனத்தில் ஆலங்காயம் வந்துள்ளார். அப்போது ஆலங்காயம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உமாபதி தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மணிகண்டன் வந்த இருசக்கர வாகனத்தை சோதனைக்காக காவல் துறையினர் நிறுத்தக் கூறியும், நிற்காமல் சென்றுள்ளார். மணிகண்டனை துரத்தி சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உமாபதி, அவரை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் பதிலுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் மீது தாகுத்தல் நடத்தி உள்ளார்.
பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனுடைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பரவி வருகின்றது.
இதனை தொடர்ந்து மணிகண்டனை போலீஸ் தாக்கியதில் காயம் அடைந்ததாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.