பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த  வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

வாணியம்பாடி அருகே 17 வயது பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி  கடத்தி சென்று திருமணம் செய்த  வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2021-11-13 06:20 GMT

போக்சோவில் கைதான வாசு 

திருப்பத்தூர் மாவட்டம்  வாணியம்பாடி அடுத்த  ஆவாரங்குப்பம் பள்ளத்துர் பகுதியை சேர்ந்த வாசு (22). இவர் ராமநாயக்கன்பேட்டை பகுதியில் பிரியாணி கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

இவர் அதே பகுதியில்  12 ஆம் வகுப்பு  படித்து வரும் 17 வயது  சிறுமியை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அந்த கடை உரிமையாளர் இவரை வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். பின்னர் கோவையில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்த அந்த வாலிபர், பள்ளி சிறுமியை ஆசை வார்த்தை கூறி  கடந்த மாதம் 15 ஆம் தேதி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் கடந்த மாதம் 16 ஆம் தேதி அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்ற போலீசார் மாணவியை தேடி வந்த போது,  சிறுமி கோவையில் இருப்பது தெரியவந்தது.

கோவைக்கு சென்ற போலீசார் அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.   கடத்தி சென்று திருமணம் செய்த அந்த வாலிபரை  போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News