தொடர் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
வாணியம்பாடியில் பெய்த தொடர் கனமழையால் கிளை ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளான திம்மாம்பேட்டை, புல்லூர், அலசந்தாபுரம், நாராயணபுரம், லட்சுமிபுரம், ஆவாரம்குப்பம், கொடையாஞ்சி, இராமநாயக்கன் பேட்டை, அம்பலூர், ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கனமழை பெய்ததன் காரணமாக, கடந்த வாரத்திலிருந்தே பாலாற்றில் நீர்வரத்து வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக அலசந்தாபுரம் மண்னாறு மற்றும் பூதனாற்றில் வெள்ளம் பெருகெடுத்து ஓடுகிறது.
இதனால் மேலும் தற்போது பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, வாணியம்பாடியை கடந்து தற்போது நீர் சென்று கொண்டு இருக்கிறது இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..