வாணியம்பாடி கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு

வாணியம்பாடியில் கொரோனா சிகிச்சை மையத்தில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

Update: 2021-05-06 03:35 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமியா தனியார் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள நோயாளிகளுக்கு, நேற்று தரமான உணவுகள், மருத்துவ வசதிகள் மற்றும் சரியான முறையில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறதா என்பதை, துணை இயக்குநர் செந்தில் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News