ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசியை மீட்ட பொதுமக்கள்

ஆந்திரா மாநிலத்திற்கு சென்ற வேனை இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி பார்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது

Update: 2022-01-13 06:15 GMT

வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு வேனில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி

வாணியம்பாடி அருகே ஆந்திரா மாநிலத்திற்கு  வேனில் கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பொதுமக்கள் பிடித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் இருந்து வெலதிகாமணிபெண்டா மலைசாலை வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு சென்ற  வேனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில்  தடுத்து நிறுத்தியுள்ளனர். பிக்கப் வேனை நிறுத்திய ஓட்டுனர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.பின்னர் லாரியில் பின்புறம்  சென்று பார்த்த போது அங்கிருந்த மூடைகளில் இரண்டு டன் ரேசன் அரிசி  இருந்தது தெரியவந்தது. 

உடனடியாக வாணியம்பாடி வட்டாட்சியர்க்கு தகவல் தெரிவித்து அங்கு சென்ற வட்டாட்சியர் மோகன்  மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தீபன் தலைமையிலான வருவாய் துறையினர் ரேசன் அரிசி மூட்டைளுடன் மினி லாரியை பறிமுதல் செய்து உணவு பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்தி சென்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News