வாணியம்பாடி கொலைவழக்கு முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் நீதிமன்றத்தில் சரண்
வாணியம்பாடியில் மஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் நீதிமன்றத்தில் சரண்;
வாணியம்பாடி கொலைவழக்கு முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மஜக பிரமுகர் வசீம் அக்ரம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த 10 ம் தேதி வாணியம்பாடி ஜீவா நகரில் மஜக நிர்வாகி வசீம் அக்ரம் (வயது 43) கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் என்பவர் சிவகாசி ஜெ.எம் 1 நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேஷ் குமார் முன்னிலையில் சரணடைந்தார்.
இதனை தொடர்ந்து 7 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஶ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைக்க போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்...