வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் பணியிடை நீக்கம்: மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!

வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் காலையில் பணி மாற்றம், மாலையில் பணியிடை நீக்கம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.

Update: 2021-07-20 12:39 GMT

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் என்கின்ற அண்ணாமலை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆணையாளராக செண்ணுகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்தார் அவர் பணி மாறுதல் சென்றுவிட்ட நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணிக்கு சேர்ந்த புவனேஸ்வரன் என்கின்ற அண்ணாமலை தற்பொழுது வரை பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் புவனேஸ்வரன் என்கின்ற அண்ணாமலையை இன்று காலை தமிழக அரசு மயிலாடுதுறைக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில் இன்று மதியம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு செய்து வந்தார்.

அதனை தொடர்ந்து நகராட்சிக்கு சென்ற ஆட்சியர் நகராட்சியில் சம்பந்தமாக கொரோனா காலகட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முழுமையாக பணிகள் மேற் கொள்ளவில்லை என பலரும் புகார் தெரிவித்திருந்தனர். நகராட்சி பணிகள் குறித்து ஆவணங்களை கேட்டுள்ளார். அதற்கு முறையாக ஆவணங்கள் காண்பிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் என்கின்ற அண்ணாமலையை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார். ஆவணங்கள் முறையாக காண்பிக்காததால் மாவட்ட ஆட்சியர் நகராட்சி ஆணையரை சஸ்பென்ட் செய்த சம்பவம் நகராட்சி அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News