வாணியம்பாடி அருகே  ஆண்டியப்பனூர் அணையில் செந்தில்குமார் எம்.எல்.ஏ ஆய்வு

வாணியம்பாடி அருகே  ஆண்டியப்பனூரில் ரூ. 11 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு  வரும்   அணையில் செந்தில்குமார் எம்.எல்.ஏ ஆய்வு

Update: 2021-06-08 16:01 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  ஆண்டியப்பனூர் பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டில்  சுமார் 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்த்தேக்க அணை கட்டப்பட்டது. இதனை  சரிவர பராமரிக்கப்படாததால் அணையினை புனரமைக்க அப்பகுதி விவசாயிகள்  அப்போதைய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அணையினைபுனரமைக்க கடந்த  2017ஆம்  ஆண்டு  வேலூரில்  நடைபெற்ற  எம்ஜிஆர்  நூற்றாண்டு  விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  ஆண்டியப்பனூர் அணை  சுற்றுலாத்தலமாக்கப்படும்  என  அறிவித்தார்  

பின்னர் அதற்காக  குழந்தைகள்  விளையாட்டு  திடல், பூங்கா  அமைத்தல், நடைபாதை, படகு இல்லம் , விருந்தினர் மாளிகை  உள்ளிட்ட  பணிகளுக்காக ரூ. 11  கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நீர்த்தேக்க அணை புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை  வாணியம்பாடி  சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேரில் சென்று  ஆய்வு  மேற்கொண்டார்.  பொதுப்பணித்துறை  உதவி  செயற்பொறியாளர் குமாரிடம்  நடைபெற்று வரும் பணிகள்  குறித்தும், அணையில் தண்ணீர்  நிரம்பி  வெளியேறும் சுரங்கப்பாதைக்குள்  சென்று  பார்வையிட்டு, அணையில்  இருந்து  வெளியேறும்  தண்ணீரை  பாசன  வசதிக்காக  பயன்படுத்த வீணாகாமல் பாதுக்காக்க வேண்டும் எனவும் பணிகளை  விரைந்து  முடிக்கவும்  பொதுப்பணித்துறை  அதிகாரிகள்  மற்றும்   ஒப்பந்ததாரிடம் கூறினார்.

ஆய்வின் போது  திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் பி.கே.சிவாஜி, பி.ஜி.எம்.சரவணன், முன்னாள் கவுன்சிலர்கள் குமார், பாரதிதாசன், கோவிந்தசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சத்தியமூர்த்தி, சிவானந்தம், ராமசாமி, செல்வராஜ்  உட்பட நிர்வாகிகள் பலர்  உடன்  இருந்தனர்.

Tags:    

Similar News