வளையாம்பட்டு ஊராட்சி கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ. தேவராஜ் பார்வையிட்டார்
வளையாம்பட்டு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ. தேவராஜ் பார்வையிட்டார்;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட வளையாம்பட்டு ஊராட்சியில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
இதனை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க. தேவராஜி பார்வையிட்டார். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதாரப் பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்