வாணியம்பாடி அருகே ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய எம்எல்ஏ தேவராஜ்
வாணியம்பாடி அருகே ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை எம்எல்ஏ தேவராஜ் வழங்கினார்;
ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில், வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு பகுதியில் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் ஏழை எளிய குடும்பத்திற்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் வழங்கினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சூரியகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்..