வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கம் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கியது
வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் 10 ஆக்சிஜன் சிலிண்டரை அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்;
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோன் நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன இதன் காரணமாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிசன் தேவைகளும் அதிகரித்து வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் 170,000 மதிப்புள்ள 10 டி டைப் ஆக்ஸிஜன் சிலிண்டரை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.
சங்க தலைவர் மருத்துவர் பரான் சவுத் தலைமையில், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி முன்னிலையில் அரசு தலைமை மருத்துவ அலுவலர் செல்வகுமாரிடம் வழங்கப்பட்டன. சங்க மருத்துவபணி இயக்குனர் செந்தில்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார். நிகழ்ச்சியில் சங்க முன்னாலள் தலைவர் பூபதி , ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் சக்கரவர்த்தி சங்க பணி இயக்குனர் அருண்குமார், அரசு மருத்துவர் தன்வீர் அகமத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.