100 PIPTAZ ஊசிகள்  சுகாதாரத்துறை மருத்துவரிடம் வழங்கப்பட்டது

வாணியம்பாடி மருந்து கடை உரிமையாளர் 100 PIPTAZ ஊசிகளை சுகாதாரத்துறை மருத்துவரிடம் வழங்கினர்

Update: 2021-05-19 16:58 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  இதன் காரணமாக உயிரிழப்புகளும் மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றன ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவி வருகின்றன

இந்நிலையில் வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் வாணி சங்கர் மெடிக்கல்ஸ்  உரிமையாளர் சங்கர் என்பவர் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருக்கக்கூடிய ஏழை மக்கள் பயன்பெறும் வகையில்  தன் தந்தையாருடன் வந்து, 100 PIPTAZ ஊசிகளை வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி. அவர்களிடம் வழங்கினார்.

உடன் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இருந்தனர்...

Tags:    

Similar News