வாணியம்பாடியில் வாட்ஸ்அப்பில் குழு ஆரம்பித்து மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
வாணியம்பாடியில் சரக்கு என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.;
வாணியம்பாடியில் வாட்ஸ்அப்பில் குழு ஆரம்பித்து மது விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள்
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ள நிலையில் கடந்த 10-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்து அதனை கள்ள சந்தையில் பல்வேறு பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.
வாணியம்பாடி பகுதிகளில் வாட்ஸ்அப் குழு ஒன்றை ஆரம்பித்து அதில் மது பாட்டில்கள் விற்பனைக்கு உள்ளன என அதில் அந்த வாட்ஸ்அப் குழுவில் 150 க்கும் மேற்பட்டோரை ஒன்றிணைத்து அதில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது..இதனுடைய தகவல் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தன. இதன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் வாணியம்பாடி டிஎஸ்பிக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதனடிப்படையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வாட்ஸ்அப் குழு உருவாக்கி மது பாட்டில்களை விற்பனை செய்து வந்த சரக்கு என்ற வாட்ஸ்சப் குழு அட்மினான பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன்(25), நியூ டவுன் பகுதியை சேர்ந்த சரவணன்(24) ஆகியோர் கைது செய்து நகர போலீசார் நடவடிக்கை. மேற்கொண்டனர்.
வாணியம்பாடி பகுதியில் வாட்ஸ்அப் குழு ஒன்றை ஆரம்பித்து அதில் மது விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது