போன் எண் கேட்டு தொந்தரவு : ஊர்க்காவல் படைவீரர் மீது பொங்கி எழுந்த பெண்

வாணியம்பாடியில் செல்போன் எண் கேட்டு தொந்தரவு செய்த ஊர்காவல் படைவீரரை இளம் பெண் போலீசில் பிடித்துக் கொடுத்தார்.

Update: 2021-08-23 17:15 GMT

வாணியம்பாடியில் பெண்ணிடம் செல்போன் எண் கேட்டு தொந்தரவு செய்த ஊர்காவல் படைவீரர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோணமேடு பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன். இவர்  5 ஆண்டுகளாக வாணியம்பாடியில் ஊர் காவல் படையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த பத்மா என்ற பெண் திருப்பத்தூரில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு செல்வதற்காக தோழியுடன் பேருந்து நிலையத்திற்க்கு  வந்துள்ளார்.

அங்கு பேருந்திற்காக காத்திருந்த நேரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஊர் காவல் படை சேர்ந்த சபரிநாதன் அந்த பெண்ணையே சுற்றி சுற்றி வந்ததாகவும், செல் போன் எண் கேட்டு தொந்தரவு செய்தும்,

கொடுக்காததால் சபரி தன்னுடைய செல் போன் எண் அருகே உள்ள இரு சக்கர வாகனத்தில் எழுதி வைத்துள்ளார். இதை அறிந்த அந்த பெண் பயந்து  அலறி கூச்சலிட்டுள்ளார்.

அப்போது சக பயணிகள் ஒன்று கூடிய பின்னர் அந்த பெண் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

அப்போது பெண்ணுடன் சேர்ந்து சக பயணிகள் அந்த ஊர் காவல் படை சேர்ந்த சபரிநாதனை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பெண்ணிடம் புகாரை  பெற்று கொண்டு தலைமறைவான சபரிநாதனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News