கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டார்
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் கூடிய கட்டமைப்பு கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டார்;
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் கூடிய கட்டமைப்பு கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட அமைக்கப்பட்டு வரும் 100 கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டமைப்பு பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி வில்வநாதன், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் மருத்துவர் செந்தில்குமார், நகர பொறுப்பாளர் சாரதிகுமார் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.