வாணியம்பாடி: அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

Update: 2021-03-19 16:15 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டியப்பனூர், இருணாப்பட்டு, ஜொல்லகவுண்னூர், பெருமாபட்டு, பள்ளவள்ளி, குரிசிலாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது அதிமுக தொண்டர்கள் மேளதாளத்துடன் பட்டாசுகள் வெடித்து வரவேற்றனர்.

மேலும் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வந்த அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரை பெண்கள் ஆர்த்தி எடுத்து அமோக வரவேற்பு அளித்தனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.கே.சிவாஜி மற்றும் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக மற்றும் தாமக கட்சியின் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News