வாணியம்பாடியில் காவல் நிலையங்களில் மாவட்ட எஸ்பி சிபி சக்கரவர்த்தி திடீரென ஆய்வு

வாணியம்பாடி காவல் நிலையங்களில் மாவட்ட எஸ் பி சிபி சக்கரவர்த்தி திடீரென ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.;

Update: 2021-06-24 15:57 GMT

வாணியம்பாடியில் காவல் நிலையங்களில் மாவட்ட எஸ்பி சிபி சக்கரவர்த்தி ஆய்வு மேற்கொண்டார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் நேற்று ஏற்பட்ட ஒரு பிரச்சனையின் காரணமாக, இன்று திடீரென வாணியம்பாடி நகர காவல்நிலையத்திற்கு மாவட்ட எஸ் பி சிபி சக்கரவர்த்தி நேரில் வந்து ஆய்வு செய்தார், 

அப்போது நகர காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலைய  போலீசார், சப்-இன்ஸ்பெக்டர்களை  நேரில் அழைத்து அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர் பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு வரும் போது அவர்களிடம் முறையாக நடந்து கொண்டு,  புகார் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க  அவர்களுக்கு உத்தரவிட்டார், மேலும் குடிபோதையில் இருப்பவர்களை தாக்க கூடாது எனவும், அவர்களை வீடியோ பதிவு செய்யும்படியும் கூறினார்.

தொடர்ந்து அம்பலூர் காவல் நிலையத்திற்குச் சென்ற அங்கு போலீஸ்நிலைய ஆய்வுக்கு பின்னர் காவலர்களுக்கு வேண்டிய பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

Tags:    

Similar News