வாணியம்பாடியில் அமையவுள்ள புதிய கொரோனா சிகிச்சை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வாணியம்பாடியில் அமையவுள்ள கண்காணிப்புடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர்

Update: 2021-05-21 02:51 GMT

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கண்காணிப்புடன் கூடிய சிகிச்சை மையம் அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று தீவிரமடைந்து வருகிறது. நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு  உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கண்காணிப்புடன் கூடிய 100 படுக்கைகள் 4 நாட்களில் அமைக்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்திருந்தார். 

அதன்பேரில் அதற்கான இடத்தை தேர்வு செய்யப்பட்டு பணிகள்  தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் சிவனருள், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் சிவனருள் உத்தரவிட்டார்.  இதில் வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் உடனிருந்தனர்.

Tags:    

Similar News