வாணியம்பாடி அருகே பறக்கும் படை சோதனையில் 60 ஆயிரம் ரூபாய் சிக்கியது

வாணியம்பாடி தமிழக ஆந்திரா எல்லை சோதனை சாவடி பகுதியில் தேர்தல் அதிகாரிகள் 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து விசாரணை

Update: 2021-03-11 13:11 GMT

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் அதிகாரிகள் பறக்கும் படை அமைத்து கண்காணித்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் தமிழக ஆந்திர எல்லை மாதகடப்பா பகுதியில் தமிழக தேர்தல் நிலைக்குழு அதிகாரி செல்வி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆந்திரா மாநிலத்தில் இருந்து வாணியம்பாடி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி 60,000 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து காரில் எடுத்துச் சென்ற 60,000 ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் காரில் வந்தவர்  வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ரியாஸ் ரகுமான் என்பது தெரியவந்தது.  மேலும் பிடிபட்ட இடம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது என்பதால் அந்த பணத்தை ஆம்பூர் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்து ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து சீல் வைத்து பின்னர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News