வாணியம்பாடி கிளைசிறையில் மூன்று பேருக்கு  கொரோனா

வாணியம்பாடியில் கிளை சிறை காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர் என‌ மூன்று பேருக்கு  கொரோனா வைரஸ் நோய்தொற்று.

Update: 2021-05-11 07:15 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் அரசினர் தோட்ட வளாகத்தில் கிளை சிறைச்சாலை உள்ளது. இதில்  ஜெயில் வார்டன் ஜெயக்குமார், இரண்டாம் நிலை காவலர் விக்னேஷ் மற்றும் தூய்மை பணியாளர் திகில்ராஜ் ஆகியோருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

அதன் பேரில்  ஜெயக்குமார் கந்திலி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் காவலர் விக்னேஷ் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள  கோவிட் கேர் சென்டரில் சிகிச்சை பெற்று வருகிறார்

தூய்மைப் பணியாளர் திகில்  ராஜ் அக்ரஹாரம் பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறை காவலர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதால், கைதிகள் மற்றும் காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. நகராட்சி பணியாளர்கள் சிறைச்சாலை முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். 

Tags:    

Similar News