வாணியம்பாடி, கொத்தக்கோட்டை கிராம தடுப்பூசி முகாமில் மாவட்டஆட்சியர் ஆய்வு
வாணியம்பாடி அருகே உள்ள கொத்தக்கோட்டை கிராமத்தில் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்;
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தக்கோட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, கொத்தக்கோட்டை ஊராட்சியில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
உடன் உதவி இயக்குநர் ஊராட்சிகள் அருண்., உதவி இயக்குநர் தணிக்கை பிச்சாண்டி., வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம்., வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன்., மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.