வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்

நிலத்தை அளவிட பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா.

Update: 2021-08-26 12:32 GMT

வாணியம்பாடி அருகே நிலத்தை அளவிட பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியை சேர்ந்தவர் ஜோதி அவரது மனைவி லட்சுமி இவர்களுக்கு 3 பிள்ளைகள் ரீட்டா, ரோசி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் வசித்து வந்தனர்.

இந்நிலையில் தந்தை ஜோதி மற்றும் தாய் லட்சுமி ஆகியோர் உயிரிழந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து தரவேண்டி வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ரீட்டா மற்றும் அவரது அண்ணன் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் குடும்பத்தினருடன் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் விரைந்து வந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்பு போராட்டத்தை கைவிட்டனர் உடனடியாக நிலத்தை அளவீடு செய்து பிரித்து தருவதாக அதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு ரீட்டா மற்றும் அவரது குடும்பத்தினர் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News