தமிழக ஆந்திரா எல்லையில் சாராய வேட்டை: 5000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!
வாணியம்பாடி அருகே தமிழக, ஆந்திரா எல்லையில் போலீசார் நடத்திய சாராய வேட்டையில் 5000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக, ஆந்திரா எல்லை பகுதியான தேவராஜபுரம், மாதகடப்பா அதை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் வாணியம்பாடி டிஎஸ்பி பழனி செல்வம் தலைமையில் காவல் துறையினர் சாராய வேட்டை நடத்தினர்.
இதில் மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்போது, போலீசார் வருவதை கண்டு சாராயம் காய்ச்சுபவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், 5000 லிட்டர் சாராய ஊறல்களை கொட்டி அளித்தனர். சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வரும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தமிழக ஆந்திர எல்லைப்பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர்.