பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவு கணக்கெடுப்பு
வாணியம்பாடி அருகே பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவு பற்றிய கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சியில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி. தலைமையில் கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து குழுவோடு வீடு வீடாக சென்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் லெவல் ஒவ்வொரு நபர்களுக்கும் எவ்வளவு உள்ளது என்ற கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
ஆக்சிஜன் லெவல் அளவு குறைவாக இருப்பின் அவர்களை கண்டறிந்து, பாதிப்பின் தன்மையை பொருத்து, வீட்டில் தனிமைபடுத்துவதா, கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைபடுத்துவதா, அல்லது அரசு மருத்துவமனையில் தனிமை படுத்துவதா என்பதற்காக நடைபெற்ற இந்த கணக்கெடுப்பை மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆய்வு செய்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி,வட்டாட்சியர் மோகன் மற்றும் அனைத்து துறை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்