ஆலங்காயம் பகுதியில் கோடை மழை
ஆலங்காயம் பகுதியில் திடீரென ஆலங்கட்டி உடன் கோடை மழை பெய்தது;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று திடீரென ஆலங்காயம் பகுதியில் உள்ள வெள்ளகுட்டை, நிம்மியம்பட்டு உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
இந்த மழை அரைமணிநேரம் நீடித்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த குளிர்ச்சி நிலவியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்