ஆலங்காயம் காவலர் குடியிருப்பு பகுதியில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு

ஆலங்காயம் காவலர் குடியிருப்பு பகுதியில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு செய்த போது குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார்;

Update: 2021-10-30 12:15 GMT

காவலர் குடியிருப்பில் ஆய்வு மேற்கொள்ளும் எஸ்பி பாலகிருஷ்ணன்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது காவல்நிலையத்தில் வருகைப் பதிவு மற்றும் வழக்கு சம்பந்தமாக ஒவ்வொரு காவலர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஆலங்காயம் காவலர் குடியிருப்பு சென்ற மாவட்ட எஸ்பி அங்கு இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவலர் குடியிருப்பு பகுதியில் குடிநீர், கால்வாய் மற்றும் மின் இணைப்புகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். அப்பொழுது அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என காவலர் குடும்பத்தினர் எஸ்பியிடம் புகார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக குடிநீர், மின்சாரம், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு போன் செய்து இதனை சரி செய்ய உத்தரவிட்டார்..

Tags:    

Similar News