வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பாம்பு: பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
வாணியம்பாடி ரயில் நிலையத்தில் விஷ பாம்பு புகுந்ததால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.;
வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பிடிபட்ட பாம்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலுக்காக காத்திருந்த நிலையம் ஒன்றாவது நடைமேடையில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு புகுந்துள்ளது.
அந்த பாம்பை கண்ட பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர் பாம்பு பிடிக்கும் இளைஞர் என்பவரை வரவழைத்தனர். அவர் பாம்பினை லாவகமாக பிடித்து எடுத்து சென்றார். ரயில் நிலையத்தில் திடீரென்று புகுந்த விஷ பாம்பால் சிறிது நேரம் பரப்பாக காணப்பட்டது.