வாணியம்பாடி: புகையிலை பொருட்கள் விற்கமாட்டோம் என வியாபாரிகள் உறுதிமொழி

வாணியம்பாடியில் குட்கா பொருட்களை விற்க மாட்டோம் என, காவல்துறையினரின் முன்னிலையில் வணிகர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.;

Update: 2021-07-28 03:10 GMT

வாணியம்பாடியில், புகையிலைப் பொருட்களை விற்க மாட்டோம் என, காவல்துறை முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட வணிகர்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பைபாஸ் சாலை பகுதியில், கடந்த மாதம் குடோன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 

இதன் தொடர்ச்சியாக,  வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்ம்  தொடர்ந்து சிறு கடைகள் மற்றும் மளிகைக்கடைகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால், வணிக நேரத்தில் வணிகர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக வணிகர்கள் கவலை தெரிவித்து வந்த நிலையில், வாணியம்பாடி வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க கூட்டத்தில்,  காவல் துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையில், வணிகர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், வணிகர்கள் இனி தங்கள் பகுதியில் குட்கா பொருட்களை தாங்கள் விற்கவோ அல்லது வினியோகம் செய்ய மாட்டோம் எனவும் அப்படி யாரேனும் செய்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்

Tags:    

Similar News