விநாயகர் சிலையை பொது இடங்கள் வைப்பதற்கு அனுமதி இல்லை: காவல்துறை
வாணியம்பாடியில் விநாயகர் சிலையை பொது இடங்கள் வைப்பதற்கு அனுமதி இல்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
வாணியம்பாடி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து ஆலோசனைக்கூட்டம் டிஎஸ்பி பழனி செல்வம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி எஸ்பி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் மற்றும் போலீசார் தலைமையில் நடைபெற்றது. இதில் பாரதி ஜனதா கட்சி மற்றும் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து அமைப்புகள் சார்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 22 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி தர வேண்டும் என கோரிக்கை மனுவை பாஜக பொதுக்குழு உறுப்பினர் சிவபிரகாசம் மனுவை கொடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவதாக கூறினர்.
மேலும், தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் தங்களுடைய வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டும் என பொது இடங்களில் வைக்கக்கூடாது என திட்டவட்டமாக கூறி அனுப்பி வைத்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறையினர் மற்றும் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக கட்சிப் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் இந்து அமைப்பினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.