வாணியம்பாடி அருகே ஊராட்சி கிணற்றை சீரமைக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை

வாணியம்பாடி அருகே அலசந்திராபுரம் ஊராட்சியில் உள்ள கிணற்றை சீரமைக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2021-07-11 12:04 GMT

வாணியம்பாடி அருகே அலசந்திராபுரம் ஊராட்சியில் உள்ள கிணற்றை சீரமைக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அலசந்திராபுரம் ஊராட்சியில் சுமார் 1000கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதிக்கு குடிநீர் தேவைக்காக ஊராட்சி கிணறு ஒன்று உள்ளன.  இந்த கிணற்றை கடந்த 2020- 21 ஆம் ஆண்டுக்காக ஆழப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு பணி மூலம்  1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கபட்டதாக கூறப்படுகிறது.  ஆனால் அதனை முழுமையாக சீரமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகின்றன.

அதே நேரத்தில் அந்த கிணற்றினை வண்ணம் தீட்டி மதிப்பீட்டில் ஆழப்படுத்தியதாக எழுதப்பட்ட காட்சி மட்டுமே உள்ளன. ஆனால் அதனை ஆழப்படுத்தவும் இல்லை, சீரமைக்கவும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

மேலும் இந்த கிணற்றுக்கு அருகே மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி,  கிணறு பாதிக்கக்கூடிய நிலையில்தான் உள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்ட பொழுது, அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் 200க்கும் மேற்பட்டோர் இதன் மூலம் தண்ணீர் பெறுவதற்கு இணைப்பு பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.  எனவே மாவட்ட நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News