ஏரி நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவு
வாணியம்பாடியில் உள்ள அனைத்து ஏரி நீர்வரத்து கால்வாய்களையும் சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவு;
வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியில் உள்ள தடுப்பணையை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்து உதயேந்திரம் ஏரிக்கு செல்லும் கால்வாய்கள் மற்றும் பள்ளிப்பட்டு ஏரி, ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டார்
அதனைத் தொடர்ந்து பாசன நீர் கால்வாய் ஆகியவற்றை தூர்வாரவும், ஏரிகளின் ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் ஊராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சம்பந்தப்பட்ட நீர்நிலைகளை தூர் வாரவும் முறையாக கால்வாய்களை சீரமைக்கவும் உடனடியாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியர் மோகன், பொதுப்பணித்துறை நீர் ஆதாரம் உதவி பொறியாளர் தர்மதுரை பேரூராட்சி செயல் அலுவலர் சேகர், மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்