வாணியம்பாடி ரயில் நிலையத்தில் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்.
வாணியம்பாடி ரயில் நிலையத்தில் வெளி மாநிலத்துக்கு கடத்த வைத்திருந்த சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில் ரயில் நிலையத்தில் ரயில் மூலமாக ரேஷன் அரிசி கடத்த இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து ஆங்காங்கே பதுக்கி கொண்டு இருப்பது குறித்து ரகசிய தகவல் வருவாய்துறையினருக்கு கிடைத்தது.
தகவலின் பேரில் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் வருவதை கண்டு ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் தப்பி மறைந்தனர்.
வட்ட வழங்கல் அதிகாரிகளின் அலட்சியத்தால் தினந்தோறும் ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.