வாணியம்பாடி அருகே ஊருக்குள் புகுந்து 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
வாணியம்பாடி அருகே ஊருக்குள் புகுந்து 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் கிராமத்தில் சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊருக்குள் புகுந்து, அங்கு இருந்த கோழி மற்றும் பெருச்சாளியை விழுங்கியுள்ளது. அதன் பின்னர் அங்கிருந்து நகர முடியாமல் இருந்த அந்த மலைப்பாம்பை கண்டு கிராம மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் இறுதி வரை வராததால், அதே பகுதியை சேர்ந்த பெய்ன்ட் தொழிலாளி ரமேஷ் என்பவர் கிராம மக்களின் உதவியுடன் மலைபாம்பினை கையில் லாவகமாக பிடித்தார்.
அருகில் இருந்த மக்கள் அந்த பாம்பிற்கு சூடம் ஏற்றி பூஜை செய்து வழிபட்டு, பின்னர் அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்..