உள்ளாட்சி தேர்தல் பணிக்கு மலைகிராமத்திற்கு நடந்தே சென்ற அதிகாரிகள்

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கு பின்பும் சாலை வசதி ஏதுமில்லாத மலைகிராமமான நெக்னாமலை பகுதிக்கு நடந்தே சென்ற தேர்தல் அதிகாரிகள்;

Update: 2021-10-08 14:48 GMT

மேக்னா மலை தேர்தல் பணிக்கு நடந்தே செல்லும் அதிகாரிகள்

வாணியம்பாடி அருகே 2500 அடி உயரமுள்ள நெக்னாமலை பகுதிக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு இயந்திரங்களை அரசு அதிகாரிகள் கைகளில் எடுத்து நடந்தே சென்றனர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெக்னாமலை கிராமம் உள்ளது தரைமட்டத்திலிருந்து சுமார் 2500 அடி உயரமுள்ள உள்ளடக்கிய நெக்னாமலை ஊராட்சி உள்ளது. இம்மலைகிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் ஆண்கள், பெண்கள் உள்பட 528 வாக்காளர்கள் உள்ளனர். இம்மலைக்கு சாலை வசதிகள் ஏதுமில்லை. தரையிலிருந்து 7 கி.மீ தூரமுள்ள மலைபாதை வழியாக தான் செல்ல வேண்டும்.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்திலேயே சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கு பின்பும் சாலை வசதி ஏதுமில்லாத மலைகிராமமாக உள்ளது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி இரண்டாம் கட்ட தேர்தல் நாளை ஓட்டுபதிவு நடைபெறுகிறது. இதுநாள் வரையில் நடைபெற்ற அனைத்து வாக்குகளை பதிவு செய்ய தேவையான உபகரணங்கள் கழுதைகள் மூலம் எடுத்து செல்லப்பட்டது.

ஆனால் இம்முறை கழுதைகள் ஏதும் கிடைக்காமல் போனதால் தேவையான உபகரணங்களை  அரசு அதிகாரிகள் 7 கி.மீ. தூரமுள்ள மலைபாதை வழியாக எடுத்து சென்றனர். நெக்னாமலை கிராமமக்கள் கடந்த 75 ஆண்டுகளாக சாலை வசதியில்லாமல் படும் துயரங்களை தேர்தல் வரும் நாட்களில் மட்டும் தான் அரசு அதிகாரிகள் உணரும் வாய்ப்பு கிடைக்கிறது.

மேலும் கிராம மக்கள் மட்டுமே தங்களுடைய ஜனநாயக கடமையை செய்து வரக்கூடிய நிலை தான் தற்பொழுது வரை உள்ளது. அரசு இன்று வரை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தராத ஒரு சூழ்நிலையை தான் உருவாகியுள்ளது. இனிவரும் காலங்களிலாவது அரசு இக்கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்படுமா என்ற கேள்வி தற்போது வரை உள்ளது

Tags:    

Similar News