வாணியம்பாடி அருகே கள்ளசாராய ஊறல் அழிப்பு.
வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 1700 லிட்டர் கள்ளசாராய ஊறல் அழிக்கப்பட்டது;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் சிந்தகாமணிபெண்டா, மாதகடப்பா, தேவராஜாபுரம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மது அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சிந்தகாமணி பெண்டா, தேவராஜ்புரம் ஆகிய மலை பகுதிகளில கள்ளச்சாராயம் காய்ச்ச தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 1700 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், பேரல்கள் மற்றும் சாராய அடுப்புகள் ஆகியவற்றை அழித்தனர்.
மேலும் போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பிச் சென்ற மாதகடப்பா பகுதியை சேர்ந்த காளிதாஸ், தேவராஜபுரம் பகுதியை சேர்ந்த மோகன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.