வாணியம்பாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்

வாணியம்பாடியில் சூதாட்டம் விளையாடிய 8 பேர் கைது செய்து அவர்களிடமிருந்து பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார்

Update: 2021-08-18 14:17 GMT

வாணியம்பாடியில் சூதாட்டம் விளையாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இராமையன்தோப்பு பகுதியில் ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற நகர போலீசார் 8 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ 20 ஆயிரம் பணம் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்

அதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில்,  அழிஞ்சிகுளம் அப்பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் ( வயது 46), ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த  ஆசிப் ( வயது 30),  முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்த பர்வேஷ் கான்( வயது 35), சென்னாபேட்டை பகுதியை சேர்ந்த சரவணன்(வயது 55), பெரியகம்மியம்பட்டு நையஸ்( வயது 29), ஜாப்ராபாத் பகுதியைச் பாரூக் ( வயது32), பஷீராபாத் பகுதியைச் சேர்ந்த சாதுல்லா( வயது 42), சிக்கனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 42) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News