வாணியம்பாடியில் இட ஒதுக்கீடு ரத்தை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்
வாணியம்பாடியில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்ததை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்.;
தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நவம்பர் மாதம் 1ஆம் தேதி இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தமிழக அரசின் வாதங்கள் சரியாக முன்வைக்கவில்லை என கூறி 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது.
இதை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை திரும்ப வழங்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர் அதன் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.