வாணியம்பாடி அருகே பாலாறு தடுப்பணை நிரம்பி தமிழக பகுதிக்கு தண்ணீர் வரத்து

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் பாலாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி தமிழகத்திற்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது;

Update: 2021-07-03 12:15 GMT

பாலாறு தடுப்பணை நிரம்பி தமிழக பகுதிக்கு தண்ணீர் வரத்தொடங்கியது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப்பகுதியான புல்லூரில் ஆந்திர அரசு அண்மையில் 5 அடியாக இருந்த தடுப்பணையை 13 அடியாக உயர்த்தி கட்டியது. இதற்கு தமிழக விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தொடர்ந்து ஆந்திரா அரசு நதிநீர் ஒப்பந்தத்தை மீறி 22 தடுப்பணைகளை பாலாற்றின் குறுக்கே கட்டி உள்ளது.

தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாலை நேரத்தில் திம்மாம்பேட்டை, நாராயணபுரம், அம்பலூர், கொடையாஞ்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் பெய்ந்த மழையின் காரணமாக புல்லூர் தடுப்பணை நிரம்பி, தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags:    

Similar News