வாணியம்பாடி மஜக பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
வாணியம்பாடியில் மஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கத்தி மற்றும் ஆயுதங்கள் வாங்கி கொடுத்ததாக மேலும் ஒருவர் கைது;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த 10ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்ட வழக்கில் செங்கல்பட்டு மாவட்டம் படப்பையில் சேர்ந்த கணேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினருக்கு உடந்தையாக இருந்ததாகவும், அவர்களுக்கு கொலைசெய்ய பட்டாக்கத்திகள் மற்றும் ஆயுதங்கள் போன்றவற்றை பெற்று கொடுத்ததாக காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்தார்.
அதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் காளிமுத்துவின் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்...