வாணியம்பாடி மஜக நிர்வாகி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

வாணியம்பாடி மஜக நிர்வாகி கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;

Update: 2021-09-18 05:32 GMT

மஜக பிரமுகர் கொலையில் கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்தவர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜீவா நகர் பகுதியில் கடந்த 10ம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி. வசீம் அக்ரம் 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சரணடைந்துள்ளனர். 

இந்நிலையில் வசீம் அக்ரம் தொழுகை முடிந்து,  அவரது வீட்டின்  அருகில் உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கொலை செய்ய காத்திருந்த கும்பலுக்கு தகவல் தெரிவித்ததாக அதே பகுதியை சேர்ந்த காலு என்கிற தஸ்தகீரை என்பவரை போலீசார் கைது செய்து, அவர்மீது வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் காளிமுத்துவேல் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

இதுவரையில் இந்த வழக்கில் 14 பேர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News