வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: அதிகாரிகள் ஆய்வு

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அமையவுள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

Update: 2021-05-24 12:30 GMT

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை அதிகமாக தீவிரமடைந்து வரும் நிலையில்  நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில்  கொரோனா  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு பகுதிகளில் சிறப்பு சிகிச்சை மையம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 100 படுக்கை மற்றும் ஆக்சிசன் செறிவூட்டும் கருவி வசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள்  நடைபெற்று வருகின்றன. அதனை இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் கூடுதல் அரசு தலைமை செயலாளர் மற்றும் போக்குவரத்துத் துறை ஆணையர் தென்காசி ஜவகர் பார்வையிட்டார் மேலும் மருத்துவரிடம் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்

இவருடன் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மாவட்ட, காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவ அலுவலர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News