வாணியம்பாடி அருகே கொரோனாவுக்கு செவிலியர் பலி
வாணியம்பாடி அருகே ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட நிம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தவர் ரங்கநாயகி (வயது 52).
இவர் கடந்த 23 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு செவிலியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது